இதற்கு முன்பு இருந்த காதல்கள் தோல்வியானது

நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் இன்று ரஜினி, அஜித், விஜய் என உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக தான் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா தமிழ் சினிமா தாண்டி தெலுங்கு, மலையாளத்திலும் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.

அதோடு சோலோ ஹீரோயினாகவும் பல படங்களில் நடிக்கின்றார். இவர் முன்பு ஒரு ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார்.

இதில் தன் காதல் முறிவு குறித்து பேசியுள்ளார், அதில் அவர் பேசுகையில், நம்பிக்கை இல்லாத காரணத்தினாலே பிரிய வேண்டிய நிலை உருவானது.

எந்த ஒரு காதலிலும் நம்பிக்கை வேண்டும், அது இல்லை என்றால் தனியாக கூட வாழலாம், அவர்களுடன் சேர்ந்து வாழ முடியாது என கூறியுள்ளார்.