இந்தியாவால் சுமார் 700 கோடி ரூபாய் வருவாய் இழப்பு

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரை அடுத்து மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுவது இந்தியா – பகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர். அது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என எந்த வகை கிரிக்கெட் என்றாலும் ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொள்ளும்.

இதனால் ஸ்பான்சர்கள் மற்றும் ஒளிபரப்பு உரிமம் மூலம் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும்.

ஆனால் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதால் அதை நிறுத்தும் வரைக்கும் இரு நாடுகளுக்கிடையில் நேரடி கிரிக்கெட் தொடர் கிடையாது என்று இந்திய அரசு முடிவு எடுத்தது. 2008-ம் ஆண்டுக்குப்பின் இருநாடுகளுக்கு இடையிலான தொடர் நடைபெறாமல் உள்ளது.