இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கெஞ்சும் இலங்கை கிரிக்கெட் வாரியம்

நம் இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதத்தில் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்ல இருந்தது

இப்படி இருக்க தற்பொழுது கொரோனா வால் இந்தியா இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதில் தடை ஏற்பட்டுள்ளது

இருந்தாலும் தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்தியா இந்தத் தொடரை ரத்து செய்யக்கூடாது என வேண்டுகோள் கேட்டுள்ளது

அதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தங்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு மிகமிக முக்கியம் எனவும் மேலும் மத்திய அரசு தங்களுக்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்தத் தொடரை மேற்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தது

அதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் கவுன்சில் , இந்தியா கேட்கும் அனைத்து நிபந்தனை, பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் இந்தியா கேட்கும் படி செய்து கொடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் கவுன்சில் உறுதி அளித்துள்ளனர்

அதனால் ஜூலை மாதம் இந்தியா இலங்கை கிரிக்கெட் தொடர் நடக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்