கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க மாட்டோம் ! மருத்துவர் செவிலியர் போராட்டம்

தற்போது நாடு முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்புக்கு யாரும் உயிர் இழந்து விடாமல் இருக்க ஒவ்வொரு நிமிடமும் மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களது உயிரை பணையம் வைத்து போராடி வருகின்றனர்

இந்த நிலையில் தற்போது சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று காலையிலிருந்தே மருத்துவர்களும் செவிலியர்களும் கொரோனா பதிக்க பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய மாட்டோம் என போராட்டத்தில் இறங்கியுள்ளனர்

அதற்கு காரணம் என்னவென்றால் கொரோனா நோய்களுக்கு மருத்துவ உதவி செய்ய தங்களிடம் போதிய சரியான கருவிகள் ஏதுமில்லை என்றும் அதனால் தங்களுக்கும் கொரோனா பரவும் பாதிப்பு உள்ளதாகவும்

அதனால் அரசு உடனடியாக மருத்துவ உபகரணங்கள் தந்தால் மட்டுமே அவர்களுக்கு நாங்கள் மருத்துவம் பார்ப்போம் என போராட்டத்தில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மனை ஊழியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்