சீனாவில் மேலும் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு- புதிய உயிரிழப்பு இல்லை

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவி 1.5 லட்சம் உயிர்களை காவு வாங்கி உள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வுகான் நகரில் அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டது.

வைரஸ் பரவத் தொடங்கியது முதல் ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட சீன அரசு வைரஸ் பரவும் வேகம் மற்றும் பலி எண்ணிக்கையை வெகுவாக குறைத்தது.