மது அருந்திவிட்டு நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் இத்தனை கொலை குற்றமா !

இதில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மதுபோதையில் அண்ணன் உடன்பிறந்த தங்கையை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளான்

பழனி அருகே இரு இளைஞர்கள் குடிபோதையில் தாராபுரம் சாலையில் சென்ற வாகனங்களை வழிமறித்து தகராறு செய்துள்ளனர் அருகில் இருந்த பெட்ரோல் பங்கிலும் ஊழியர்களை தாக்கி விட்டு அங்கிருந்த பொருட்கள் சேதம் செய்துள்ளனர்

ஈரோடு அருகில் பார்த்திபன் மது அருந்திவிட்டு கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளார்

கொடுமுடி வேலப்பம் பாளையம் அருகே கல்லூரி மாணவன் மது அருந்திவிட்டு குடிபோதையில் கிணற்றில் குளித்தபோது மூழ்கி உயிர் இழந்தான்

கரூரில் பாஸ்கர் என்பவரை அவர் உறவினார்கள் 5பேருடன் குடித்துவிட்டு அடித்துக் கொலை செய்துள்ளனர்

குளிதலையில் சரவணன் என்பவரை மர்ம நபர்கள் குடித்து விட்டு கொலை செய்துள்ளனர்

கும்பகோணம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் சண்டை என 40+ மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

தஞ்சை கீழவாசல் பகுதியில் அருண்குமார் என்பவர் போதையில் நண்பருடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்ய பட்டர்…

————×———-×———–×———-

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி (Technicalunbox.com) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்