ஸ்மார்ட் போனை பயன்படுத்தி கொரோனாவை கண்டறிய புதிய தொழில்நுட்பம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் இருக்கிறதா? என கண்டறிய வேண்டுமென்றால், 10 லட்சம் பேரில், 149 பேருக்கு பரிசோதனை செய்கிற அளவுக்குத்தான் பரிசோதனைக்கருவி வசதி (டெஸ்டிங் கிட்ஸ்) இருக்கிறது என்பது அவரது கருத்தாக இருக்கிறது.

அது மட்டுமல்ல, இந்த வகையில், உலகின் அடிமட்டத்தில் உள்ள லாவோஸ் (157). நைஜர் (182), ஹோண்டுராஸ் (162) நாடுகளைப் போல இந்தியாவும் இருக்கிறது, எனவே இங்கே பரிசோதனை வசதிகளைப் பெருக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து ஓங்கிக்குரல் கொடுத்து வருகிறார்.

பொதுவாக கொரோனா வைரசை கண்டறிவதற்கு இங்கே ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை, ரேபிட் ஆண்டிபாடி பரிசோதனை ஆகிய 2 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

இந்த பரிசோதனைகள், ஒருவரின் சுவாச குழாயில் இருந்து எடுக்கப்படுகிற மாதிரி, தொண்டையில் இருந்து எடுக்கப்படுகிற மாதிரி, மூக்கின்பின்புறம் உள்ள நாசியோபாரிங்கல் பகுதியில் இருந்து எடுக்கப்படுகிற மாதிரி ஆகியவற்றை கொண்டு கண்டறியப்படுகிறது.

இதற்கு கூடுதல் செலவு ஆகிறது என்பதுடன், முடிவை அறிய நீண்ட நேரம் பிடிக்கிறது.

இந்த நிலையில்தான் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான மாற்றுவழிமுறைகளை உருவாக்க இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுக்கூடங்களில் அமர்ந்து ஆராய்ச்சிகளை நடத்திய வண்ணம் உள்ளனர்.

இதில் இந்தியா இப்போது ஒரு மைல் கல்லை எட்டி இருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியர்களும் எழுந்து நின்று அதற்காக ஜோராக கைதட்டலாம்.