உயிரை பணயம் வைத்த விக்ரம் ! கோப்ரா திரைப்படத்தில் இப்படி ஒரு ஆபத்தான காட்சியா விக்ரமுக்கு

நடிகர் சியான் விக்ரம் பொருத்தவரை கடந்த பல வருடங்களாக அவர் நடித்து வரும் எந்த ஒரு திரைப்படங்களும் விக்ரம் அவருக்கு கைகொடுக்கவில்லை என்பதுதான் உண்மை

இந்நிலையில் தற்போது விக்ரம் கோப்ரா திரைப்படத்தில் 7 வேடத்தில் அவர் நடித்துள்ளார், மேலும் இந்த திரைப்படம் ரஷ்யா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் படப்பிடிப்பை எடுத்து முடித்துள்ளனர்

அதனால் இந்தத் திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது

இந்த நிலையில்தான் தற்போது கோப்ரா திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மிக ஆபத்தான காட்சியை டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து விக்ரம் நடித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது

அதாவது விக்ரம் நீருக்குள் அவர் சண்டை போடும் காட்சி ஒன்றில், விக்ரம் அவருக்கு கை வாய் என அனைத்து இடங்களிலும் கயிறு வைத்து கட்டப்பட்டடு, விக்ரமை தண்ணிக்குள் தள்ளி விடும் படியான ஒரு காட்சி   படமாக்கப்பட்டிருந்தது

மேலும் இந்த காட்சி மிக ஆபத்தான காட்சி எனவும், சிறு பிழை ஏற்பட்டிருந்தாலும் விக்ரமுக்கு அது மிகப்பெரிய ஆபத்தாக முடிந்து இருக்கலாம் எனவும் தற்போது தெரியவந்துள்ளது