இந்தியன் படப்பிடிப்பு மீண்டும் நடக்குமா மிகப்பெரிய சிக்கலில் சிக்கிய சங்கர் லைக்க

இந்தியன் 2 படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடந்து வந்தது, இப்படி இருக்க யாரும் எதிர்பாராத விதமாக மூவர் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரெயின் விழுந்து இறந்து போனார்கள்

அதைத் தொடர்ந்து தற்போது கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக கொரோனா பிரச்சனையால் இந்தியன் 2 படப்பிடிப்பில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது

தற்போது மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது

அது என்னவென்றால் இந்தியன்-2 திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 325 கோடிக்கும் அதிகமாக ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தனர்

ஆனால் தற்போது நெருக்கடியில் உள்ள லைக்கா நிறுவனம் 220 கோடிகளுக்கு இந்தியன் திரைப்படத்தை தயாரிக்க சங்கரிடம் சில தினங்களுக்கு முன் தெரிவிக்க ,அதற்கே மிகப்பெரிய அதிருப்தியை சங்கர் அடைந்தார்.

இப்படி இருக்க தற்போது லைக்கா நிறுவனம் இன்னும் பட்ஜெட்டை குறைத்து சுமார் 150 கோடிக்கு இந்தியன் 2 திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என ஷங்கரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்

இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர், நான் இன்டர்வெல் வரை இந்தத் தொகைக்கு இந்தியன் 2 திரைப்படத்தை தயாரித்து தருகிறேன் என லைகாவிடம் தெரிவித்துள்ளார்

இதனால் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு தூங்குமா என்பதில் மிகப் பெரிய அளவில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்