ஐபிஎல் இந்த வருடம் எந்த மாதம் நடத்தப்படலாம் பிசிசிஐ முடிவு

கடந்த 12 வருடங்களாக ஐபிஎல் உலகம் முழுதும் இருக்கும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் மிகப்பெரிய அளவில் திருப்திப்படுத்திக் கொண்டு இருந்தது

இப்படி இருக்க இந்த வருட ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் நடுவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது, காரணம் மகேந்திர சிங் தோனி அவர் விளையாடப் போகும் கடைசி ஐபிஎல் தொடர் எனவும் , அதனால் ரசிகர்கள் நடுவில் இந்த ஆண்டு ஐபிஎல் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது

ஆனால் எதிர்பாராத விதமாக இந்த வைரஸ் வந்ததால் அனைத்து  கிரிக்கெட்டுகளும் தடைப்பட்டுப் போனது

இப்படி இருக்க நிலைமை இன்னும் சீர் அடையாததால் இந்த வருடம் ஐபிஎல் நடக்குமா ? என்கிற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்கள் நடுவில் தற்பொழுது உள்ளது

இருந்தாலும் தற்போது ஒரு முக்கிய தகவல் தெரியவந்துள்ளது அது என்னவென்றால், இந்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பை நடக்கவில்லை என்றால்

அதே காலகட்டத்தில் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்தலாம் என தற்பொழுது இந்திய ஐபிஎல் நிர்வாகிகள் பிசிசிஐ உடன் கலந்து பேசி இந்த முடிவை தற்போது எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்