சூர்யா ,கார்த்திக் ,ஜோதிகா மூவர் திரைப்படங்களும் இனி தியேட்டரில் ரிலீஸ் ஆகாது

முன்னதாக ஜோதிகா நடிப்பில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் முதன்முறையாக தமிழ் சினிமா வரலாற்றில் OTT தளத்தில் வெளியானது

இப்படி இருக்க அப்பொழுதே தியேட்டர் சங்க உரிமையாளர்கள் ஜோதிகா மீதும் சூர்யா மீதும் கடும் கோபத்தில் இருந்தனர்

அதைத்தொடர்ந்து சூரரைப்போற்று திரைப்படத்தையும் நாங்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்யப் போவதில்லை, என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துக் கொண்டு வந்தனர்

இப்படி இருக்க இன்று திடீரென பேட்டி கொடுத்த தமிழ்நாடு தியேட்டர் சங்கத்தலைவர்,

இனி சூர்யா குடும்பத்தினர் நடிக்கும் எந்த ஒரு திரைப்படத்தையும் நாங்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்யப் போவதே இல்லை

என அனைத்து தியேட்டர் உரிமையாளர்களும் ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் இந்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளனர்

இதனால் அடுத்து சூர்யா என்ன செய்யப் போகிறார் ,மீண்டும் தியேட்டர் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவாரா, அல்லது சூரரைப்போற்று திரைப்படத்தை OTT லேயே வெளியிட்டுக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்