மீண்டும் துவங்குகிறது டிவி சீரியல் படப்பிடிப்பு, அதற்கு இத்தனை நிபந்தனைகளா ?

கொரோனா வைரஸால் தமிழகத்திலும் பாதிக்கப்பட்ட சின்னத்திரை சீரியல்கள் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது

ஆனால் அதற்கு மிகப்பெரிய நிபந்தனைகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது

அது என்னவென்றால் 20 நபர்களுக்கு அதிகமாக யாரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளக் கூடாது,

நடிகர்களைத் தவிர அனைத்து தொழிலாளர்களும் வேலை ஆட்களும் முகக்கவசம் கையுறை களை கண்டிப்பாக அணிய வேண்டும்,

எந்த ஒரு பார்வையாளர்களையும் தேவையற்ற கூட்டங்களையும் கண்டிப்பாக படப்பிடிப்பு தளத்தில் அனுமதிக்கக் கூடாது

மேலும் அனுமதிக்கப்பட்ட உள் அரங்கு ஸ்டூடியோவில் மட்டும்தான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் மற்ற பொது இடங்களில் படப்பிடிப்பை அனுமதியின்றி நடத்தக் கூடாது,

இறுதியாய் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னும் பின்னும் கண்டிப்பாக கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும்,

அதேபோல் பயன்படுத்தும் அனைத்து பாகங்களுக்கும் கிருமி நாசினி யை அளிக்கப்பட வேண்டும் என,

கடுமையான உத்தரவுகள் உடன் தற்போது தமிழக அரசு மீண்டும் சின்னத்திரை சீரியல் படப்பிடிப்புகளை எடுக்க அனுமதி அளித்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்