வலிமையில் மொத்தம் இத்தனை வில்லனா ? அவரே கூறிய தகவல் இதோ

வலிமை திரைப்படம் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே நடிகர்கள் நடிகைகள் பட்டியலை தற்போதுவரை படக்குழுவினர்கள் வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளனர்

இந்நிலையில் கதாநாயகியாக ஹியூமா குரேசி வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார் என்கிற தகவல்கள் முன்னதாக கசிந்திருந்தது

இப்படியிருக்க தல அஜித் சினிமாவிற்கு நுழைந்து 28 வருடங்கள் பூர்த்தி ஆனதை முன்னிட்டு தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடிப்பதாக தெரிய வந்த கார்த்திகேயா அவர் தற்பொழுது அஜித் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

இதன் மூலம் வலிமை திரைப்படத்தில் கார்த்திகேயா அஜித்திற்கு வில்லனாக நடிக்கிறார் என்கிற தகவல்கள் உறுதி ஆகி உள்ளது

மேலும் வலிமை இத்திரைப்படத்தில் கார்த்திகேயா மட்டும் வில்லன் அல்ல ,மொத்தம் மூன்று வில்லன்கள் வலிமை திரைப் படத்தில் அஜித்திற்கு எதிராக நடித்து வருகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்